கருப்பன் என் ஏக்கம் புரிந்து
கருத்த மேகத் திடை புகுந்து
தானும் கருப்பாகிறாள்
என் நிலவுக் காதலி.
பெண்மை - மென்மை?
அவளை என்னவளாய் நினைத்தேன்.
அவளாவது மாதம் ஒருமுறை
மனதை மாற்றுகிறாள்.
நிலவை பெண்ணாய் நினைத்தேன்.
நிலவோ நொடிக்கொருமுறை
மேகங்களை மாற்றியது.
நீயும், அவளும் ஒன்றா…
நிலவே,
மோனலிசா என்ன
உன் பிரதியா?
அவளும்
நான் சிரித்தால் சிரிக்கின்றாள்
நான் அழுதால் அழுகின்றாள்.
தொட்டு விட…
நிலவுப் பெண்ணே!
உன் மீது பட்டுவிட
என் கைகள் தான் எட்டவிலலை.
அந்த மேகங்களையாவது
உன்னைத் தொட்டுவிட விட்டுவிடேன்.
அவை
நான் விட்ட - என்
ஏக்கப் பெருமூச்சுகள்.
குண்டாஸ்
எனக்கு மட்டும்
அதிகாரம் இருந்திருந்தால்
முதலில்
இந்த இடிமன்னர்கள்
மேகங்களையெல்லாம்
“குண்டாஸ்” ஸில்
போட்டிருப்பேன்.
என்ன தைரியம்?
உன் காதலன்
நான் பார்க்கவே
உன்னை இடித்துச் செல்கிறார்கள்.
தானும் கருப்பாகிறாள்
என் நிலவுக் காதலி.
பெண்மை - மென்மை?
அவளை என்னவளாய் நினைத்தேன்.
அவளாவது மாதம் ஒருமுறை
மனதை மாற்றுகிறாள்.
நிலவை பெண்ணாய் நினைத்தேன்.
நிலவோ நொடிக்கொருமுறை
மேகங்களை மாற்றியது.
நீயும், அவளும் ஒன்றா…
நிலவே,
மோனலிசா என்ன
உன் பிரதியா?
அவளும்
நான் சிரித்தால் சிரிக்கின்றாள்
நான் அழுதால் அழுகின்றாள்.
தொட்டு விட…
நிலவுப் பெண்ணே!
உன் மீது பட்டுவிட
என் கைகள் தான் எட்டவிலலை.
அந்த மேகங்களையாவது
உன்னைத் தொட்டுவிட விட்டுவிடேன்.
அவை
நான் விட்ட - என்
ஏக்கப் பெருமூச்சுகள்.
குண்டாஸ்
எனக்கு மட்டும்
அதிகாரம் இருந்திருந்தால்
முதலில்
இந்த இடிமன்னர்கள்
மேகங்களையெல்லாம்
“குண்டாஸ்” ஸில்
போட்டிருப்பேன்.
என்ன தைரியம்?
உன் காதலன்
நான் பார்க்கவே
உன்னை இடித்துச் செல்கிறார்கள்.
No comments:
Post a Comment