எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அன்றும் கூட இப்படித்தான்.
அருகருகே அமர்ந்திருந்தோம்.
எப்போதும் ஓயாமல் “லொட லொட” வென்று
அடுக்கடுக்காய் கேள்வி கேட்பாய் நீ.
அன்றும் கூட இப்படித்தான்.
“அஸ்வின், உனக்கேன்டா மீசையே வல்ல?” - ம் வரும்…
“உனக்கேன்டா தாடியும் வல்லை? - ம் வரும்…
“ஆமாம். உங்கப்பா குண்டு. அம்மா நெட்டை,
நீ மட்டும் எப்படி ஒல்லியா, குட்டையா?” - ம்ப்ச். அப்படித்தான்
“ஆமாம். அன்னைக்கு வந்தாளே உன் கடைசித் தங்கச்சி
குட்டிப் பிசாசு, அவ வயசு என்னாச்சு?” - ம். எண்பது (எரிச்சலுடன்.)
“அஸ்வின். நாளைக்கு என்ன நாள். ஞாபகமிருக்கா?”
உன் பிறந்த நாளை நான் மறப்பேனா? இருந்தும். “சாரிம்மா…”
“ப்ச். என் பர்த்டே. நம்ம காதலோட ஏஜாவது தெரியுமா?”
(என்ன கேள்வி கேட்டுவிட்டாய் பெண்ணே.)
இருந்தும் தெரியாதவனாய் - “தெர்லயேடா”
“விளையாடாதே அஸ்வின். வீட்டிலே அப்பா, 'கம்ப்பல்' பண்றார்.
வேறு மாப்பிள்ளையை கட்டிக்கச் சொல்றார்” - “கட்டிக்கோயேன்”
“டேய். உனக்கெலாம் நிலவன்னு யார் பேர் வைச்சது” -கடுப்புடன் நீ.
“ம். எங்க தாத்தா” - கிண்டலாய் நான்.
உனக்காக நானாகவே மாற்றி வைத்துக்கொண்ட
பெயரென்று தெரிந்தும் - நீ அன்று
சீண்டி விளையாடினாயே…
இன்றும் கூட என் மனதின் வயது இருபது தான்.
என் கடைசி தங்கையின் பேரன் நேற்றுக் கேட்டான்,
“ஏன் தாத்தா, நீங்க கல்யாணமே கட்டிக்கலே…”
கேள்விகள் கேட்டே என் வாழ்வை
கேள்விக்குறியாக்கிப் போனவளே. - இவன்
கேள்விக்காவது நீயே வந்து பதில் சொல்லேன்...
No comments:
Post a Comment