Friday, July 18, 2008

காயம்

வாழ்க்கையில்
பலருக்கும் காயங்கள்
என் வாழ்க்கையில் மட்டும்
பல காயங்கள்.

ஒரு காயத்தின்
ஆற்றாமையில்
மறு காயம்
எதுவும சில காலம் - என
நான் படித்த பாடம்.

முழு முதல் நட்பு
தொலைந்ததொரு
காயம்.

ஆற்றாமையின் விளைவால்
காதல் கொண்டதொரு
காயம்.

தங்கையாய் வாய்த்து
வந்ததொரு
காயம்.

தன்னையே நட்புக்காய்
தரத் துணிந்தவளொரு
காயம்.

அந்த நட்புக்கு ங்ம்
உலகம் கற்பித்ததொரு
காயம்.

விதியென்றே எண்ணி
மனம் நொந்ததொரு
காயம்.

வார்த்தை மொழியில்லா
விழிவீச்சு
காயம்.

தேற்ற வழியில்லை
வாழ்வெல்லாம்
காயம்.

1 comment:

Anonymous said...

வாழ்வே மாயம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். இந்த கவிதைக்கு "வாழ்வே காயம்" என்று தலைப்பு கொடுத்து இருக்கலாம். என் பார்வை - வாழ்க்கையின் சோகங்கள் தான் கவிதை ஆகுமா ? சந்தோஷங்கள் கவிதை ஆகாதா ? நல்ல முயற்சி. கவிதையில் ஒரு எழுத்து பிழை. களங்கம் என்று இருக்க வேண்டிய இடத்தில் "கலங்கம்" என்று இருக்கிறது ! வாழ்த்துக்கள் !!