Friday, July 18, 2008

முதன் முதலாய்...

அன்பே!
முதன்முதலாய் என்றுன்னைக்
கண்டேனோ – அன்றே
உன்னை
வென்றனதாய்க்
கொண்டேன்.

முதன்முதலாய் என்றுன்தன்
விழிவீச்சு கண்டேனோ – அன்றே
என்
மொழி, பேச்சு மறந்தனதாய்க்
கொண்டேன்.

முதன்முதலாய் என்றுன்னுடன்
பேசிக்களித்தேனோ – அன்றே
உன்னை
நேசித்தழைந்ததாய்
கொண்டேன்.

முதன்முதலாய் என்றுன்னுடன்
கூடிச் சிரித்தேனோ அன்றே
என் ம(வு)ன மொக்கு
வெடித்து விரிந்தனதாய்
கொண்டேன்.

முதன்முதலாய் என்றுன்னுடன்
ஒட்டி நடந்தேனோ – அன்றே என்னுள்
மின்னல் வெட்டி நடந்தனதாய்
கொண்டேன்.

முதன்முதலாய் என்றுன்தன்
தளிர்க்கரம் தீண்டப் பெற்றேனோ – அன்றே
எனை குளிர் சுரம்
தீண்டிடக் கொண்டேன்.

முதன் முதலாய் என்றுன்னுடன்
கூடி விளையாடினேனோ – அன்றே என்
சப்த நாடியும்
இளையோடிடக் கொண்டேன்.

சகியே
முதன் முதலாய் என்றுன்தன்
சோகம் அறிந்து,
உள்ளம் புரிந்ததோ – அன்றே என்தன்
மோகம் அழிந்து, மனதில்
பள்ளம் விரிந்ததாயும்
கொண்டேன்.

No comments: