Monday, June 16, 2008

நண்பியின் நட்பு

மின்சாரப் பார்வை
பரிமாற்றம்
இதழோரப் புன்னகை
சிறிதே அறிமுகப் படலம்
இதுவே நம் நட்பின் துவக்கம்.

ஒரே இடத்தில் டியூசன்
சற்றே மன நெருக்கம்
அவ்வப்போது அருகமர்வு
பாடத்தில் சார் லயிக்க
கதையளப்பில் நமது லயிப்பு.

கடந்தகாலக் கசப்பையெல்லாம்
நிகழ்காலம் அமிர்தமாக்க
தினமும் டிபன்பாக்ஸ் பரிமாற்றம்.

“பதினெட்டுக்கும்” மீறிய
விசய அலசல்கள்.

நட்புக்கு கலங்கம் செய்ய
அங்கேயும் சில கருங்காலிகள்
இடியாய் உணரும் நான்
தடையாய் உணரா நீ
எப்போதும் போல் நட்பு.

பள்ளி இறுதி நாள்
டியூசனில் முன்னிரவு வரை
“ஆட்டோகிராப்” கையெழுத்திடல்
மௌனம், விசும்பல், அழுகை,
தேற்றல், விசும்பல், அழுகை.

நட்பின் முத்தாய்ப்பாய் முதல் கடிதம்
முடிக்கும் போது “அன்புடன்”
இரண்டாவதில் “ With Love”
மூன்றாவதில் “Ever Your's”
நான்காவதில் “திருமண அழைப்பு”.

மீண்டும் நான்
தனிமையில்
கலைந்து போன கனவுகளுடனும்
தொலைந்து போன
நினைவுகளுடனும்.

No comments: