அண்டம் காக்கின்ற
அண்டங் காக்கையே...
எதிரிக்கு தெரியக்கூடாதது
நண்பனுக்கே தெரியக்கூடாதாம்.
ஆனாலும் உன்னை
நம்புகிறேன்.
அன்னத்தை விடுத்து
புறாவை விடுத்து
உன்னையே நம்புகிறேன்.
காக்கை என்பதால்
கரைந்து உரைப்பாயோ
இல்லை
அண்டம் காக்கை என்பதால்
அவள் இதயத்தை
கரைத்து வருவாயோ
எனக்குத் தெரியாது.
என் “அவள்”
எனக்கு வேண்டும்.
No comments:
Post a Comment