Monday, June 16, 2008

காலம்

ஒரு காலம்

அது ஒரு காலம்

மனதுக்குள் பனி நதியும்

கோடி கோடி பூக்களுமாகக்

குவிந்து குளிர்ந்து

சிலிர்த்துக் கிடந்தது

அது ஒரு காலம்!

காலம்...

இதுவும் ஒரு காலம்

தென்றலும், நிலவும், சந்தனமும்

குழைந்த உன் பார்வை

குழைக்கக் குழைக்க மனசு

எரிமலைப் பிழம்பில் கொதித்துக்

குமறுது இது ஒரு காலம்!


என்ன சொல்ல

காவியத்துக்கு காதலுக்கு

என்று தான் கஷ்டமில்லை...

No comments: