என்னருகில்
நீ இருந்தால்
இதயமென்னும் கலையரங்கில்
காதலென்னும் கவிபாடி
பண்பாடி பாட்டிசைத்து
வானுயரும் மா அளவு
நானுயரத்தான்
நினைத்தேன்.
உன்னருகில்
நானிருப்பேன்
என்றுணராதிருந்திருந்தேன்.
இத்தருணம், நற்தருணம்
கவிபாடும் நற்பணியை
கச்சிதமாய் நான்தொடர
முகமதியை காட்டிவிடேன்
என் முழு மதியே…
No comments:
Post a Comment