Thursday, September 18, 2008

நெஞ்சோடு கொஞ்சம்…

கண்ணே…
நான் உன்னால் கவரப்பட்டேன்
என்றா நினைக்கிறாய்.
உன் கண்ணால் கவரப்பட்டேன்
நினைத்துப் பார்க்கிறேன்.

என்றோ எவராலோ விளையாட்டாய்
துவங்கியதல்லவா
நம் நட்பு.

முதன் முதலாய்
உன்னுடன் பேசிய போது
நான் கூட
என் நிலை மறந்தேன்.

அடேயப்பா!
எவ்வளவு இனியவைபயண காலங்கள்.
“சுகி” என்ற சுருக்கம் - உன்னை
சுகப்பட வைத்ததை
சிவந்து விட்ட முகமே
கூறிவிட்டதே.

உன் அழகு பூனைக்கண்களில் தான்
எவ்வளவு ஜாலங்கள் காட்டுகிறாய்.
சொல்லப்போனால்…
நீ என்னுடன் பேசியதை விட
உன் கண் என்னுடன் பேசிய நேரமே
அதிகமாய்ப்படுகிறது.

என்வரவு கண்டால் திகைப்பு
நெருங்கக் கண்டால் சந்தோசம்
பேசக் கண்டால் வெட்கம்
சுற்றம் கண்டால் பயம்
பிரிவு கண்டால் விடைபெற – என்று

அந்தக் கண்களில்தான்
ஒரு ஜாலக்காட்சியே
அரங்கேற்றுகின்றாய்.

என் சொல்லுக்கு
நீ ஆட்டுவிக்கப்பட்டாயே
அது தான் உன் சொல்லுக்கு
என்னை ஆட்டுவித்தது.

எனக்காய் நீ எடுத்த முயற்சிகள்
என்னைநெகிழ வைக்கின்றன.
“மதி”யாய் என் பெயர் மாற்றம்
“மதி”யே உனக்கு சந்தோசமாய்ப்படலாம் - என்
நிம்”மதி” தொலைந்ததென்னவோ
அன்றுதான்.

No comments: